< Back
மாநில செய்திகள்
கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியது ஏன்..? - கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம்
மாநில செய்திகள்

கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியது ஏன்..? - கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம்

தினத்தந்தி
|
31 Oct 2023 9:22 AM IST

சிறையில் இருந்த சமயத்தில் நீட் தொடர்பான தற்கொலை செய்திகளை படித்தபோது மன உளைச்சல் ஏற்பட்டது என கருக்கா வினோத் கூறியுள்ளார்.

சென்னை,

கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணம் குறித்து கருக்கா வினோத், போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது,

சிறையில் இருந்து வெளியே வந்த பின் நான் யாரையும் சந்திக்கவில்லை. சிறையில் இருந்த சமயத்தில் நீட் தொடர்பான தற்கொலை செய்திகளை படித்தபோது மன உளைச்சல் ஏற்பட்டது. ஆறாம் வகுப்பு படிக்கும் என் மகனை மருத்துவ கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.

நீட் தேர்வு இருந்தால் என் மகனின் மருத்துவ கனவு பறிபோகும் என்பதால் பெட்ரோல் குண்டு வீசினேன். பிஎப்ஐ அமைப்பினருக்கும் எனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. மேலும், 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க கவர்னர் கையெழுத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்