நீட் தேர்வை முன்பு ஆதரித்து விட்டு இப்போது எதிர்ப்பது ஏன்? கிருஷ்ணசாமி விளக்கம்
|நீட் தேர்வை முன்பு ஆதரித்ததாகவும், ஆனால் தற்போது வணிக நோக்கில் நீட் தேர்வுகள் செயல்பட தொடங்கி உள்ளதால் அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கோவை,
கோவையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "நீட் தேர்வு காரணமாக கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் நிலை இருக்கிறது. நீட் தேர்வை முதலில் ஆதரித்தவன் நான். ஆனால் தற்போது நீட் தேர்வுகள் வணிக நோக்கில் செயல்பட தொடங்கியுள்ளது. ஆனால் மாணவர்களின் உண்மையான திறமையின் அடிப்படையில் தான் தேர்வுகள் செயல்பட வேண்டும். நீட் தேர்வில் மோசமான நிலை உருவாகியுள்ளது. நீட் பயிற்சி நிலையங்கள் விதிமுறைகள் மீறி செயல்படுகின்றன" என்றார்.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் கோரிக்கை சட்டமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் கோரிக்கை ஏற்கப்பட வேண்டும். அது குறித்து விவாதிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு ஒன்றே இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாகும்." என்றார்.