நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்..? - ஆ.ராசா ஆவேச பேச்சு
|இந்துக்கள் குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில், நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என, ஆ.ராசா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
சென்னை:
தி.மு.க. எம்.பி. ஆ.ராசா கடந்த 6-ந் தேதி வேப்பேரி, பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் இந்து மதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. .இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆ.ராசா மீது மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆ. ராசா தான் பேசியது குறித்து விளக்கமளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது,
"ஆர்.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள். மன்னிப்பு கேட்பது பெரிய விசயம் இல்லை. மன்னிப்பு கேட்பது என்பது மனித மான்பு. நான் மன்னிப்பே கேட்க மாட்டேன் என்றால் அவனை விட முட்டாள், அயோக்கியன் வேறு யாரும் இல்லை.
நான் மன்னிப்பு கேட்க தயார். என்ன மன்னிப்புன்னு சொல்லுங்க. நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை. இந்து மதத்தின் பெயரால் சொல்லப்படும் சனாதானத்திற்கு எதிரானவர்கள்" எனக் கூறினார்.