ஐகோர்ட்டை முறையாக பராமரிக்காதது ஏன்? - மத்திய தொல்லியல் துறைக்கு ஐகோர்ட்டு கேள்வி
|சென்னை ஐகோர்ட்டை முறையாக பராமரிக்காதது ஏன் என்று மத்திய தொல்லியல் துறைக்கு, ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டை முறையாக பராமரிக்காதது ஏன் என்று மத்திய தொல்லியல் துறைக்கு, ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த கோர்ட்டு, மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், புராதன சின்னங்கள், கட்டிடங்கள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என, அதிருப்தி தெரிவித்தது.
10 ஆண்டுகள் ஆகியும் சென்னை கன்னிமாரா நூலக சீரமைப்பு பணிகள் முடிக்கப்படவில்லை எனவும், ஐகோர்ட்டு கட்டிடம் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என பலமுறை நினைவூட்டியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியது.
இதனிடையே, போதுமான பணியாளர்கள் இல்லை என்று, தொல்லியல் துறையில் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த கோர்ட்டு மத்திய தொல்லியல் துறையில் எத்தனை பணியாளர்கள் உள்ளனர்? பணிகளை முடிக்க எவ்வளவு கால அவகாசம் வேண்டும்? என கேள்வி எழுப்பி, வழக்கை வருகிற 30-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.