< Back
மாநில செய்திகள்
கடவுள் நடராஜர் பற்றி அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
விருதுநகர்
மாநில செய்திகள்

கடவுள் நடராஜர் பற்றி அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

தினத்தந்தி
|
28 Aug 2022 2:16 AM IST

கனல்கண்ணனை கைது செய்த போலீசார், கடவுள் நடராஜர் பற்றி அவதூறாக பேசியவர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என எச்.ராஜா கேள்வி எழுப்பினார்.

ராஜபாளையம்,

கனல்கண்ணனை கைது செய்த போலீசார், கடவுள் நடராஜர் பற்றி அவதூறாக பேசியவர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என எச்.ராஜா கேள்வி எழுப்பினார்.

கிருஷ்ண ஜெயந்தி விழா

ராஜபாளையத்தில் விசுவ இந்து பரிஷத் சார்பாக கிருஷ்ண ஜெயந்தி விழாவை இன்று கொண்டாட பொன்விழா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் போலீஸ் அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் ராஜபாளையம் வந்த பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா, இதுெதாடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜபாளையத்தில் திராவிடர் கழக பொதுக்கூட்டம், கிறிஸ்தவ கூட்டம் நடத்துவதற்கு வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா அனுமதி அளித்துள்ளார். ஆனால், கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாட அனுமதி அளிக்கவில்லை.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைதான் நடைபெறுகிறது.

நடராஜர் பற்றி அவதூறு

கடவுள் நடராஜரை அவதூறாக பேசி யூ-டியூப்பில் பதிவிட்டவர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் பெரியார் சிலைக்கு எதிராக கருத்து தெரிவித்த கனல் கண்ணனை கைது செய்துள்ளனர்.

கிருஷ்ண ஜெயந்தி விழா விஷயத்தில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. திட்டமிட்டபடி விழா நடைபெறும்.

இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

கோர்ட்டில் ஆஜர்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக ஹரிஹரன் என்பவர் இருக்கன்குடி மற்றும் விருதுநகர் பஜார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்த வழக்கு, அரசியல் பிரமுகர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு அந்த கோர்ட்டில் நீதிபதி வள்ளி மனவாளன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எச்.ராஜா ஆஜரானார். பின்னர் விசாரணை அடுத்த மாதம் 27-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்எச்.ராஜா சாமி தரிசனம் செய்தார்.

மேலும் செய்திகள்