< Back
மாநில செய்திகள்
பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
மாநில செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

தினத்தந்தி
|
5 March 2024 11:10 AM IST

பிரதமர் மோடி - பி.டி.ஆர் சந்திப்பு குறித்து அரசு சார்பில் தகவல் வெளியாகாத நிலையில் இந்த விவகாரம் பேசுபொருளானது.

சென்னை,

பிரதமர் மோடி கடந்த 27-ம் தேதி மதுரை வந்து இருந்தார். மதுரை பசுமலையில் பிரதமர் தங்கியிருந்தபோது அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்-பிரதமர் மோடி சந்திப்பு நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமரை தனியாக சந்தித்து 10 முதல் 15 நிமிடங்கள் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

இந்தநிலையில், பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். அதில்,

பிரதமர் மோடிக்கும் எனக்கும் தனி உறவு உள்ளதுபோல் போலி செய்தியை பரப்புகின்றனர். முதல்-அமைச்சர் வழங்கிய அரசாங்க பணியைதான் நான் செய்தேன். அரசாங்க பணியின் காரணமாகவே பிரதமரை சந்தித்தேன். தனிப்பட்ட விருப்பத்திற்காக அல்ல என்றார்.

பிரதமர் மோடி - பி.டி.ஆர் சந்திப்பு குறித்து அரசு சார்பில் தகவல் வெளியாகாத நிலையில் இந்த விவகாரம் பேசுபொருளானது.

மேலும் செய்திகள்