< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
செந்தில்பாலாஜியை உதயநிதி, சபரீசன் விரைந்து சென்று சந்திப்பது ஏன்? - சி.வி.சண்முகம் கேள்வி
|14 Jun 2023 1:30 PM IST
செந்தில்பாலாஜியை உதயநிதி, சபரீசன் விரைந்து சென்று சந்திப்பது ஏன்? என சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை உதயநிதி ஸ்டாலின், சபரீசன் விரைந்து சென்று ஏன் சந்திக்கின்றனர்?. சுதந்திர போராட்ட வீரர்போல செந்தில் பாலாஜியை திமுகவினர் சித்தரிக்கின்றனர். செந்தில் பாலாஜி நாட்டுக்காக போராடியதுபோல் திமுகவினர் பேட்டி அளிக்கின்றனர்.
வருமான வரி பெண் அதிகாரியை திமுகவினர் தாக்கியது போது என்ன செய்து கொண்டிருந்தனர். காது குத்தும் விழாவா? தகவல் கொடுத்து விட்டு சோதனைக்கு வருவார்கள்?" என்று கூறினார்.