< Back
மாநில செய்திகள்
அமைச்சர் உதயநிதியை சந்தித்தது ஏன் ?  டி.கே.சிவக்குமார் விளக்கம்
மாநில செய்திகள்

அமைச்சர் உதயநிதியை சந்தித்தது ஏன் ? டி.கே.சிவக்குமார் விளக்கம்

தினத்தந்தி
|
3 Sept 2024 5:23 PM IST

பெங்களூருவில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவது தொடர்பாக டி.கே.சிவக்குமார் சென்னையில் ஆய்வு செய்தார்.

சென்னை,

சென்னை வந்துள்ள கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார். தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்தார். இரு மாநில அமைச்சர்களுக்கு இடையே நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகா துணை-மந்திரி டி.கே. சிவக்குமார் இன்று சென்னை சேத்துப்பட்டில் இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை பார்வையிட்டு, செயல்பாடுகளை கேட்டறிந்தார். திடக்கழிவு மேலாண்மை குறித்தும் ஆய்வு செய்த அவர், பெங்களூருவில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவது தொடர்பாக சென்னையில் ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இந்த நிலையில் , அமைச்சர் உதயநிதியை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டி.கே.சிவக்குமார்,

கூட்டணி கட்சி என்பதால் அமைச்சர் உதயநிதியை சந்தித்தேன். உதயநிதி உடனான சந்திப்பு நட்பு ரீதியாக இருந்தது. மேகதாது அணை விவகாரத்தில் நீதிமன்றம் சொல்வதை மதிப்போம். என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்