< Back
மாநில செய்திகள்
விநாயகர் சதுர்த்திக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து தெரிவிக்காத‌து ஏன்?  - எச்.ராஜா கேள்வி
மாநில செய்திகள்

விநாயகர் சதுர்த்திக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து தெரிவிக்காத‌து ஏன்? - எச்.ராஜா கேள்வி

தினத்தந்தி
|
4 Sept 2022 10:12 AM IST

விநாயகர் சதுர்த்திக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து தெரிவிக்காத‌து ஏன்? என எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.

சொக்கலிங்கபுரம்,

மதுரை மாவட்டம், சொக்கலிங்கபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும்போது,

அமைச்சர் சேகர்பாபு கொள்கை அடிப்படையில் கூறியுள்ளது போன்று, அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து நிலங்களும் மீட்கப்பட்டால், அவருடைய செயல்பாட்டுக்கு பாராட்டு தெரிவிக்கப்படும் என்றார்.

மேலும், அனைத்து பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவிக்கும் முதல்-அமைச்சர், விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்காத‌து ஏன்? என கேள்வி எழுப்பினார். மேலும், இது தொடர்பாக முதல்-அமைச்சருக்கு கண்டனம் தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார்

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்