< Back
மாநில செய்திகள்
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வாலிபரின் செல்போன் திருட்டு புதரில் வீசியது யார்?- போலீசார் விசாரணை
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வாலிபரின் செல்போன் திருட்டு புதரில் வீசியது யார்?- போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
4 Sept 2023 12:15 AM IST

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வாலிபரின் செல்போன் திருடு போனது. அந்த செல்போனை புதரில் வீசியது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விக்கிரவாண்டி,

செஞ்சி நாட்டார்மங்கலம் அருகே உள்ள முடையூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(வயது 25), தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மனைவி ஷப்னா ஆஸ்மியை(23) 2-வது பிரசவத்திற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் உள்ள காத்திருப்போர் கூடத்தில் படுத்து தூங்கினார். பின்னர் நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது, சட்டைப்பையில் வைத்திருந்த செல்போனை காணவில்லை. அதனை யாரோ திருடிச்சென்றிருப்பது தொியவந்தது. இதுபற்றி தமிழ்செல்வன், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விக்கிரவாண்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் காத்தமுத்துவிடம் புகார் கொடுத்தார். தொடர்ந்து அவர் அவர் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் சிக்னல் மூலம் செல்போன் இருக்கும் இடத்தை தேடினர். அப்போது செல்போன் காத்திருப்போர் கூடத்தின் பின்புறம் இருப்பது சிக்னல் மூலம் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள புதரில் பாலித்தீன் பையில் சுற்றப்பட்டு செல்போன் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த செல்போனை தமிழ்செல்வனிடம் ஒப்படைத்தனர். மேலும் தமிழ்செல்வனிடம் செல்போன் திருடியது யார்?, அதனை பாலித்தீன் பையில் சுற்றி புதரில் வீசியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்