< Back
மாநில செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
தேனி
மாநில செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

தினத்தந்தி
|
27 May 2022 8:16 PM IST

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

உத்தமபாளையம் அருகே உள்ள காக்கில்சிக்கையன்பட்டியை சேர்ந்தவர் அகமதுமீரான் (வயது 21). இவர் கடந்த 2020-ம் ஆண்டு 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து சிறுமியின் தாய் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அகமது மீரானை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி சாந்திசெழியன் இன்று தீர்ப்பளித்தார். அதன்படி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அகமது மீரானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாநில அரசு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட அகமது மீரானை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்