நீங்கள் யாருக்கு ஓட்டளித்தீர்கள்? செல்போனில் வந்த கேள்வியால் பரபரப்பு
|வாக்காளர்கள் இது குறித்து புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்போம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
ஓட்டுப்பதிவு நேற்று மாலை 6 மணிக்கு முடிந்த பிறகு பெரும்பாலானோரின் செல்போனுக்கு ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசும் ஒரு பெண்மணி, உங்கள் நாடாளுமன்ற தொகுதியில் நீங்கள் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தீர்கள்? என்று கூறி ஒவ்வொரு வேட்பாளர்களின் பெயரையும் சொல்லி அவர்களுக்குரிய எண்ணையும் சொல்லி பட்டனை அழுத்த சொன்னது. அதற்கு பெரும்பாலான வாக்காளர்கள் பட்டனை அழுத்தினர். சிலர் அந்த எண்ணை துண்டித்து விட்டனர். இது குறித்து தேர்தல் அலுவலர்களிடம் கேட்ட போது, தேர்தல் ஆணையம் இது போன்று வாக்காளர்களை தொடர்பு கொண்டு கேட்பதில்லை. ஏனென்றால் யாருக்கு வாக்களித்தீர்கள்? என்று கேட்பது தவறு. தனியார் அமைப்புகள் யாரோ இது போன்ற செயலில் ஈடுப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் இது குறித்து புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்போம் என்றனர். செல்போனில் இதுபோன்று கேள்வி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.