< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
பென்னாகரம் அருகேசாலையை கடந்து சென்ற வெள்ளை நிற பாம்புசமூக வலைத்தளத்தில் வீடியோ வைரல்
|11 July 2023 12:30 AM IST
பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கரியம்பட்டியில் இருந்து முதுகம்பட்டி கிராமம் வரை தற்போது தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையின் அருகே நாய்க்கனேரி என்ற கிராமத்தில் உள்ள குட்டை ஒன்றில் நேற்று சுமார் 8 அடி நீளம் உடைய வெள்ளை நிற பாம்பு ஒன்று மிதந்து சென்றது. இதையடுத்து குட்டையில் இருந்து வெளியேறிய பாம்பு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் ஊர்ந்து சென்றுவிட்டது. இந்த அரிய வகை வெள்ளை பாம்பை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஒரு சிலர் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.