< Back
மாநில செய்திகள்
கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற போது பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
தேனி
மாநில செய்திகள்

கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற போது பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு

தினத்தந்தி
|
14 Jun 2023 12:15 AM IST

வீரபாண்டி அருகே கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற போது பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கம்பம் கோம்பை ரோடு தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). தனியார் வங்கி மேலாளர். கடந்த 9-ந்தேதி இவர், தனது மனைவி, குழந்தையுடன் தேனியில் இருந்து மோட்டார்சைக்கிளில் கம்பத்திற்கு வந்து கொண்டிருந்தார். தேனி- குமுளி பைபாஸ் சாலையில் வீரபாண்டி அருகே தனியார் பள்ளி பகுதியில் மோட்டார்சைக்கிள் வந்தது. அப்போது அவர்களுக்கு பின்னால் மோட்டார்சைக்கிளில் சென்ற 2 மர்ம நபர்கள் சுரேஷ் மனைவி கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.

இதில் சுதாரித்து கொண்ட அவரது மனைவி சங்கிலியை இழுத்து பிடித்து கொண்டார். அப்போது சுமார் 7 பவுன் சங்கிலி மட்டும் அறுந்து அவரது கையில் கிடைத்தது. மீதி 4 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து கொண்டு தப்பி ஓடினர். இதுகுறித்து வீரபாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்