< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பியபோது மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தி.மு.க. பிரமுகர் பலி
|10 Nov 2022 3:06 PM IST
துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பியபோது மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தி.மு.க பிரமுகர் பலியானார்.
கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செஞ்சிபானம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு (வயது 50). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர், தற்போது தி.மு.க. கிளை செயலாளராகவும் உள்ளார். இவருக்கு சகிலா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
அன்பு, நேற்று முன்தினம் மடத்துக்குப்பம் பகுதியில் நிகழ்ந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு இரவு மீண்டும் தனது வீடு நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் ராமன்கோவில் ரெயில்வே கேட் அருகே வரும்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலை ஓரம் இருந்த மின் கம்பத்தில் பலமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அன்பு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.