உல்லாசமாக இருந்த போது...பேசிய தொகையை விட அதிகம் கேட்ட திருநங்கை - கழுத்தை நெரித்துக் கொன்ற லாரி ஓட்டுனர்
|சென்னை மாதவரத்தில், பாலியல் உறவில் ஈடுபட, பேசிய தொகையை விட அதிகம் பணம் கேட்ட திருநங்கையை, கழுத்தை நெரித்துக் கொன்ற லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் திருநங்கை சரவணன் என்ற சனா (27). இவர், கடந்த 22ம் தேதி மணலி, எம்.ஜி.ஆர். நகர் அருகே சாலையோரத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து மாதவரம் பால்பண்ணை இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து திருநங்கையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து, திருநங்கையை கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டார். அப்போது திருநங்கையின் செல்போனுக்கு கடைசியாக பேசிய நபர் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த கணேசன் (48) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது, அவர் தான் சனாவை கொலை செய்த விவரம் தெரியவந்தது. கணேசனின் சொந்த ஊர் ராமநாதபுரம்.
இவர் லாரி டிரைவர் ஆவார். இவரது குடும்பத்தினர் ராமநாதபுரத்தில் உள்ளனர். வேலைக்காக கணேசன் சென்னை வந்து சத்தியமூர்த்தி நகரில் தனிமையில் தங்கியுள்ளார். அப்போது கனரக வாகனங்கள் நிற்கும் இடத்தில், கணேசனை பாலியல் உறவில் ஈடுபட சனா அழைத்துள்ளார். பின்னர், கூறிய தொகையை விட பல மடங்கு கேட்டு மிரட்டியதால், ஆத்திரமடைந்த கணேசன் சனாவை கழுத்தை நெரித்துக் கொன்றதாக விசாரணையில் தெரியவந்தது.
இதை தொடர்ந்து, கணேசனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.