< Back
மாநில செய்திகள்
கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாவு தாக்கி 2 பேர் மயக்கம்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாவு தாக்கி 2 பேர் மயக்கம்

தினத்தந்தி
|
20 April 2023 3:05 PM IST

கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாவு தாக்கி 2 பேர் மயக்கம் அடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வடநெம்மேலி பகுதியை சேர்ந்தவர் வனமுத்து, இவர் கிழக்கு கடற்கரைசாலையில் பழைய பொருட்களை சேகரித்து ஏற்றுமதி செய்யும் காயலான் கடை வைத்துள்ளார். இவரது வீட்டில் உள்ள கழிவு நீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டதால் அதனை சுத்தம் செய்வதற்காக கிருஷ்ணன்காரணை பகுதியில் இருந்து கழிவு நீர் அகற்றும் லாரியை வரவழைத்து, மோட்டார் மூலம் கழிவு நீரை அகற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது வெளியூரில் இருந்து வந்து புதுக்கல்பாக்கத்தில் தங்கி கழிவு நீர் அகற்றும் வேலை செய்து வரும் அண்ணாமலை (வயது 32), மணி (36) ஆகியோரை உதவிக்கு அழைத்துள்ளனர். இப்போது இருவரும் கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் பணியை தொடங்கியபோது, திடீரென விஷவாவு தாக்கி இருவரும் மயக்கம் அடைந்தனர். அங்கு இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு கோவளத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்