< Back
மாநில செய்திகள்
மீனவர்கள் தாக்கப்படும்போது எங்கே இருந்தீர்கள்..? கொதித்து பேசிய சீமான்
மாநில செய்திகள்

"மீனவர்கள் தாக்கப்படும்போது எங்கே இருந்தீர்கள்..?" கொதித்து பேசிய சீமான்

தினத்தந்தி
|
20 Sept 2024 8:26 AM IST

மீனவர்கள் தாக்கப்படும்போது எங்கே இருந்தீர்கள் என்று சீமான் கேள்வி எழுப்பினார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

கஞ்சா, அபீன், குட்கா, போதை மாத்திரை, போதை ஊசி இதுஎல்லாம் போதைப்பொருள் அப்படியென்றால் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுபானம் என்ன? கோவிலில் கொடுக்கும் தீர்த்தமா? புனித நீரா?

இது ஒரேநாடா? ஒரேநாடு ஒரேதேர்தல் என்றால் பீகார், மேற்குவங்காளத்தில் பல கட்டங்களாக தேர்தல் நடத்தியது ஏன்? தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் வடமாநிலங்கள் அனைத்திலும் 4 கட்டம், 5 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. அதற்கு காரணம் என்ன?

மீனவர்கள் தாக்கப்படும்போது எங்கே இருந்தீர்கள் (மத்திய அரசு) ? நாங்கள் வென்று மேலே ஏறியவுடன் ஒரேநாடு ஒரேதேர்தல் குறித்து பேசிப்பாருங்கள்' என்றார்.


மேலும் செய்திகள்