பள்ளிகள் திறப்பு எப்போது?.. அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை
|அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று கல்வித்துறை உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று கல்வித்துறை உயர் அதிகாரிகளை அடையாறில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்.இதில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், இயக்குனர் அறிவொளி, மாதிரி பள்ளிகள் இயக்குனர் சுதன், தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், பாட நூல் கழக இயக்குனர் கஜலட்சுமி, தேர்வுத்துறை இயக்குனர் சேதுவர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புக்கான தேர்வு முடிவுகளை எப்போது வெளியிடலாம் என்பது பற்றிஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் கோடை வெப்பம் மற்றும் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட இருப்பதால் விடுமுறை முடிந்து பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. வரும் கல்வியாண்டில் பள்ளி கல்வித்துறை செயல்பாடுகள் மற்றும் மாணவர் சேர்க்கை அதிகரித்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.