< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மாநில அரசியலுக்கு வருவது எப்போது? - கனிமொழி அளித்த பதில்
|29 Aug 2024 10:14 AM IST
சென்னை மைலாப்பூரில் மாணவர்களுடன் நிகழ்ச்சியொன்றில் கனிமொழி எம்.பி. கலந்துரையாடினார்.
சென்னை,
தி.மு.க., எ.ம்பி.யும், துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி, சென்னை மைலாப்பூரில் மாணவர்களுடன் நிகழ்ச்சியொன்றில் கலந்துரையாடினார். அப்போது அரசியல் நுழைவு குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு கனிமொழி பதில் அளித்தார். அதில், தனது தந்தை கருணாநிதி கைதின் போது காவல்துறையை நோக்கி சாதாரண கேள்வி எழுப்பியபோது, அதனையும் குற்றமாக எதிர்கொண்ட தருணத்தை நினைவு கூர்ந்தார்.
அந்த அசாதாரண தருணத்திலும் கலைஞர் ஒரு போராளியாக எதிர்கொண்டதையும், அதுவே தனது அரசியல் நுழைவு என்றும் கனிமொழி தெரிவித்தார். மேலும், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராவதும், தான் மாநில அரசியலுக்கு வருவது குறித்தும் கட்சியும், முதல்-அமைச்சரும் முடிவு செய்வார்கள் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.