< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
பழனிக்கு பாதயாத்திரை சென்றபோதுமோட்டார்சைக்கிள் மோதி தம்பதி படுகாயம்
|3 Jan 2023 12:15 AM IST
தேனி அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்றபோது மோட்டார்சைக்கிள் மோதி தம்பதி படுகாயம் அடைந்தனர்.
தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 45). இவரது மனைவி செல்லம்மாள் (42). நேற்று முன்தினம் இரவு இந்த தம்பதி, தனது மகன் மற்றும் உறவினர்களுடன் பழனிக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தனர். பெரியகுளம்-வத்தலக்குண்டு சாலையில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் பழனிசாமி, அவரது மனைவி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த அருண்பாண்டியன் மீது பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.