< Back
மாநில செய்திகள்
பஸ் நிறுத்தத்தில் தூங்கியபோதுபயணியர் இருக்கையில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு
தேனி
மாநில செய்திகள்

பஸ் நிறுத்தத்தில் தூங்கியபோதுபயணியர் இருக்கையில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
26 Aug 2023 12:15 AM IST

ஆண்டிப்பட்டி அருகே பஸ் நிறுத்தத்தில் தூங்கியபோது பயணியர் இருக்கையில் இருந்து விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

ஆண்டிப்பட்டி அருகே உள்ள அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 56). இவரது மனைவி ஜெயந்தி. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளன. நேற்று சேகர், வேலைக்கு செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். இதற்கிடையே கதிர்நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்த பயணியர் இருக்கையில் அவர் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் அதில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜெயந்தி ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்