கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது.? அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு
|நாளை முதல் 1-9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 3-ந்தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 30-ந்தேதியும் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இந்த நிலையில், நாளை முதல் 1-9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்றும் அமைச்சர் அறிவித்து உள்ளார்.