< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி பள்ளியில் நேரடி வகுப்புகள் எப்போது? - எதிர்பார்ப்பில் மாணவர்களின் பெற்றோர்
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி பள்ளியில் நேரடி வகுப்புகள் எப்போது? - எதிர்பார்ப்பில் மாணவர்களின் பெற்றோர்

தினத்தந்தி
|
18 Aug 2022 3:23 PM IST

கள்ளக்குறிச்சி மெட்ரிக் பள்ளி கடந்த 36 நாட்களாக போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் நேரடி வகுப்புகள் எப்போது என மாணவர்களின் பெற்றோர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கள்ளக்குறிச்சி,

கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் கடந்த மாதம் 17ஆம் தேதி நடந்த வன்முறை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளி முழுவதும் சூறையாடப்பட்ட நிலையில் கடந்த 36 நாட்களாக போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் பள்ளி உள்ளது.

இதில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 1ஆம் தேதி முதல் வாசுதேவனூர் கிராமத்தில் உள்ள பாலாஜி கல்வியியல் கல்லூரியில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால் எல்கேஜி முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவே பாடங்கள் நடத்தப்படுகிறது.

இவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க வேண்டும் என ஆட்சியரை சந்தித்து மாணவர்களின் பெற்றோர் மனு அளித்தனர். இதன்பேரில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சின்னசேலம் பகுதியில் உள்ள மாற்று தனியார் பள்ளி, கல்லூரிகளில் இடம் தேர்வு செய்யப்பட்டதாக ஆட்சியர் தெரிவித்தார்.

இதனிடையே அதற்கான நடவடிக்கைகளை உடனே தொடங்க வேண்டும் என்றும் பெற்றோர் தரப்பில் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்