< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வீலிங் செய்தபோது விபத்து - பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் காயம்
|17 Sept 2023 10:12 PM IST
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் பைக் வீலிங் செய்தபோது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார்.
காஞ்சிபுரம்,
பிரபல யூடியூபரான டிடிஎப் வாசன் 'மஞ்சள் வீரன்' திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இயக்குனர் செல்அம் இயக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில் டிடிஎப் வாசன் பைக் வீலிங் செய்தபோது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் ஊராட்சி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அவர் வீலிங் செய்தபோது பைக் தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் அவர் சுயநினைவின்றி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கை எலும்பு உடைந்ததால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு பிளேட் வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.