< Back
மாநில செய்திகள்
மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளிக்கு சக்கரம் பொருத்திய நாற்காலி
சிவகங்கை
மாநில செய்திகள்

மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளிக்கு சக்கரம் பொருத்திய நாற்காலி

தினத்தந்தி
|
21 May 2022 1:09 AM IST

சிங்கம்புணரியில் மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளிக்கு சக்கரம் பொருத்திய நாற்காலி வழங்கப்பட்டது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மனநலம் பாதித்த நடக்க இயலாமல் அமர்ந்தப்படி கைகளை ஊன்றிய நிலையில் 50 வயதான மாற்றுத்திறனாளி சுற்றி திரிந்தார். பொதுமக்கள் கொடுக்கும் உணவு வகைகளை சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில், மாற்றுத்திறனாளிக்கு சாலையில் நகர்ந்து செல்வதற்கு வசதியாக சக்கரங்கள் பொருத்திய சேர் வடிவிலான பலகை கொடுக்கப்பட்டது. பின்னர் அவரது முடியை திருத்தம் செய்து, புத்தாடை அணிவித்து, உணவு கொடுத்து சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில் ஆகியோர் உபசரித்தனர். இவர்களது மனிதநேயத்தை அந்த பகுதி மக்கள் பாராட்டினார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்