< Back
மாநில செய்திகள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழக அரசின் வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிப்பு
மாநில செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழக அரசின் வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிப்பு

தினத்தந்தி
|
6 Dec 2023 2:44 PM IST

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன.

இதனால் அங்கே வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கும் மக்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசுடன் இணைந்து உதவ முன்வரும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்காக தமிழக அரசின் வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 9791149789, 9445461712, 9895440669, 7397766651 ஆகிய எண்கள் மூலம் வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்டு மீட்புப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்