< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"எப்படி இருந்த நாம் இப்படி ஆகிவிட்டோமே என்று தோன்றுகிறது.." - பண்ருட்டி ராமச்சந்திரன் வேதனை!
|2 March 2023 9:06 PM IST
எடப்பாடி பழனிசாமியால் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளும் வெற்றி பெற்றுள்ளனர். சுமார் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.
இந்தநிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
அதிமுகவின் தற்போதைய நிலை மிகுந்த வேதனையை அளிக்கிறது. எடப்பாடி பழனிசாமியால் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு டெபாசிட் கிடைத்தது ஆறுதலாக இருக்கிறது என்றார்.