< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
இளமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்..! வைரமுத்து ருசிகர தகவல்
|25 Sept 2022 7:38 PM IST
இளமையாக இருப்பதற்கான ருசிகர தகவலை வைரமுத்து கூறியுள்ளார்.
சென்னை,
கவிஞர் மீரா கலை இலக்கிய பேரவை, சென்னை கவிதா பதிப்பகம் சார்பில், கவிஞர் இலக்கியா நடராஜனின் 'பெயர் தெரியாத பறவையென்றாலும்' மற்றும் 'மயானக்கரை ஜனனங்கள்' எனும் நூல் வெளியீட்டு விழா சிவகங்கையில் நடைபெற்றது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நூல்களை வெளியிட, கவிஞர் வைரமுத்து பெற்றுக் கொண்டார். இந்த விழாவில், அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய வைரமுத்து, புத்தகம் வாசிப்பதால் இளமையாக இருக்கலாம் என கூறினார்.