சென்னை
ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை பதிவு செய்ய வழிமுறை என்ன? மாநகராட்சி வெளியிட்டது
|ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை பதிவு செய்யும் வழிமுறை என்ன? என மாநகராட்சி வெளியிட்டது.
இதுக்குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை உயிர்வாழ் சான்றிதழ் அளிக்க வேண்டும். அவர்கள் நேரில் வருவதில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு, ஜீவன் பிரமாண் செயலி மூலமாக மின்னணு உயிர்வாழ் சான்றிதழை அளிக்கலாம். இந்திய அஞ்சல் துறை வங்கியின் சேவை மூலம் ரூ.70 செலுத்தி வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழை பதிவு செய்யலாம். அரசு இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு ஆண்டு உயிர்வாழ் சான்றிதழை பதிவு செய்யலாம். வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழ் படிவத்தினை பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, இந்திய தூதரக அலுவலர், நீதிபதி சான்று உறுதி அலுவலரிடம் உயிர்வாழ் சான்று பெற்று ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு தபால் மூலம் அனுப்பலாம். ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் நேரடியாக உயிர்வாழ் சான்றிதழ் அளிக்க ஏதுவாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ரிப்பன் கட்டிட வளாகத்தில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கேயும் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.