< Back
மாநில செய்திகள்
அரசியல் சாசனத்திற்கும் பாரம்பரிய பஞ்சாயத்துக்கும் என்ன சம்பந்தம்? - யு.ஜி.சி. அறிக்கை குறித்து சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி
மாநில செய்திகள்

"அரசியல் சாசனத்திற்கும் பாரம்பரிய பஞ்சாயத்துக்கும் என்ன சம்பந்தம்?" - யு.ஜி.சி. அறிக்கை குறித்து சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி

தினத்தந்தி
|
24 Nov 2022 12:41 AM IST

அரசியல் சாசன நாளில் பாரம்பரிய பஞ்சாயத்து தொடர்பான தலைப்புகளில் உரையாற்ற யு.ஜி.சி. அறிவுறுத்தியதற்கு சு.வெங்கடேசன் எம்.பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை,

நவம்பர் 26-ந்தேதி அரசியல் சாசன நாளில், 'முன்னுதாரன மன்னர்' மற்றும் 'கிராம பாரம்பரிய பஞ்சாயத்து' என்ற தலைப்புகளில் உரையாற்ற வலியுறுத்தி யு.ஜி.சி. வெளியிட்டுள்ள அறிக்கைக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அரசியல் சாசனத்திற்கும் பாரம்பரிய பஞ்சாயத்துக்கும் என்ன சம்பந்தம்? என்றும் இது அரசியல் சாசன நாளா? அல்லது கட்டப் பஞ்சாயத்து நாளா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ஜனநாயகத்திற்கான நாளினை சனாதனத்தின் நாளாக மாற்ற கருத்துத்தாள் வழங்கியுள்ள இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் மீதும், யு.ஜி.சி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.



மேலும் செய்திகள்