< Back
மாநில செய்திகள்
பொங்கல் பரிசு தொகுப்பு என்னென்ன?.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு என்னென்ன?.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

தினத்தந்தி
|
9 Jan 2024 10:26 PM IST

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்திற்கு ரூ. 2,436 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஒன்று போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் ரூ. 1,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தற்போது பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்குவதற்கான டோக்கன்கள் வழங்கும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. இந்த சூழலில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்வை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தால் அரசுக்கு ரூ. 2 ஆயிரத்து 436 கோடி செலவினம் ஏற்படும் என்றும், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்பவர்கள் என 2,19,71,113 குடும்பத்தினர் பயனடைவர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்