< Back
மாநில செய்திகள்
வரும் காலம் எப்படி?? மின்மினியை கேளுங்கள்…
மாநில செய்திகள்

வரும் காலம் எப்படி?? மின்மினியை கேளுங்கள்…

தினத்தந்தி
|
30 May 2024 11:52 AM IST

தங்களது வருங்காலம் குறித்தும்,வாழ்வின் நற்காரியங்கள் குறித்தும் பிரசன்ன ஜோதிடம் வழியாக மின்மினி மூலமாக பலன்களை தெரிந்துகொள்ளலாம்.

தமிழர்களுக்கான முதல் ஹைப்பர் லோக்கல் சோசியல் மீடியா என்கிற பெருமித அடையாளத்தோடு அறிமுகமான மின்மினி செயலி தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தனது பயனர்களுக்கு ஊக்கம் தரும் வகையில், பல போட்டிகளையும், நிகழ்ச்சிகளையும் நடத்தி பயனாளர்கள் மத்தியில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளது.அந்த வரிசையில் #மின்மினிஆஸ்ட்ரோ என்ற நிகழ்ச்சி வரும் மே 29, முதல் 31ம் தேதி வரை மின்மினி செயலியில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சி குறித்து மின்மினியின் செயல் துணைத் தலைவர் திரு.ஸ்ரீராம் கூறுகையில், "இந்த நிகழ்ச்சியை பிரபல ஜோதிடர்களுடன் இணைந்து நாம் நடத்துகிறோம். ஜோதிடத்தில் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் அல்லது கேள்விகள் இருந்தால் #minminiastro என்ற ஹேஷ்டேகை உபயோகித்து வீடியோ பதிவாக மின்மினி செயலியில் போஸ்ட் செய்யலாம். உங்கள் கேள்விகள் எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம், உதாரணத்திற்கு, "2024ல் என் எதிர்காலம் எப்படி இருக்கும் ?", "எனக்கு இந்த வருடம் திருமணம் நடக்குமா அல்லது எப்போது நடக்கும்??", "இந்த வருடத்தில் தீபாவளிக்கு முன்பாக வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளதா? " ," எனக்கு பதவி உயர்வு அல்லது வேலை மாற்றம் 3 மாதத்திற்குள் கிடைக்குமா?" , " என் பிறந்தநாளுக்கு முன் புது வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளதா? " என்பன போன்ற உங்களது எதிர்காலம் தொடர்பான முக்கியமான கேள்விகள் எதுவாகினும் அவற்றை நீங்கள் வீடியோ வடிவில் கேட்கலாம்" என்றார்.

பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜோதிடர்கள் பிரசன்ன ஜோதிடம் என்ற ஜோதிட முறையில் பதில் அளிப்பார்கள். கேள்விகள் கேட்கும் நேரத்தை கணித்து ஜோதிடம் சொல்லும் முறையை பிரசன்ன ஜோதிடம் என்பர். ஜோதிடர்கள், கேள்வி கேட்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தை கணித்து துல்லியமான பதில்களை வழங்குகின்றனர் இது வேத ஜோதிடத்தில் மிகவும் மதிக்கப்படும் முறையாக கருதப்படுகிறது

பிரசன்ன ஜோதிடம், இந்து ஜோதிடமுறையின் ஆறு முக்கிய கிளைகளில் ஒன்றாகும். அனைத்து விளக்கங்களும்,பதில்களும் தெளிவுகளும் ஜோதிடர்களால் வழங்கப்படுகிறது, மின்மினிக்கு இதில் எந்த நேரடித் தொடர்பும் இல்லை.தங்களது வருங்காலம் குறித்தும்,வாழ்வின் நற்காரியங்கள் குறித்தும் பிரசன்ன ஜோதிடம் வழியாக மின்மினி மூலமாக பலன்களை தெரிந்துகொள்ளலாம்.இதற்கு மின்மினி செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் மூலமாக பதிவிறக்கம் செய்து பயனராக பதிவு செய்யவேண்டும் அதன்பிறகு தங்களது கேள்விகளை வீடியோ வடிவில் மின்மினியில் பதிவிட வேண்டும்.

"மின்மினி நடத்தும் போட்டிகள் அனைத்திற்கும் மக்கள் பேராதரவு கொடுத்து ஊக்கப்படுத்தி வருகின்றனர். ஒரு சோசியல் மீடியா செயலி இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்துவது இதுவே முதல் முறையாகும் எனவே இம்முறையும் இந்த முயற்சிக்கு மக்கள் தங்களது வரவேற்பையும்,நல்லாதரவையும் அளிப்பார்கள் என நம்புகிறோம் ", என்றார் மின்மினியின் செயல் துணைத் தலைவர் திரு.ஸ்ரீராம்.

மேலும் செய்திகள்