விருதுநகர்
அடுத்த 30 ஆண்டுகளில் பணி வாய்ப்புள்ள துறைகள் என்னென்ன?
|அடுத்த 30 ஆண்டுகளில் பணி வாய்ப்புள்ள துறைகள் என்னென்ன என்பது குறித்து மாணவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என கலெக்டர் கூறினார்.
அடுத்த 30 ஆண்டுகளில் பணி வாய்ப்புள்ள துறைகள் என்னென்ன என்பது குறித்து மாணவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என கலெக்டர் கூறினார்.
வழிகாட்டுதல் நிகழ்ச்சி
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் பிளஸ்-1, மற்றும் பிளஸ்-2 வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்லூரி கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் கூறியதாவது:- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையிலும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்வி கடன் குறித்த தகவல்களும், எதிர்கால வேலை வாய்ப்புகள், உயர்கல்வியில் உள்ள படிப்புகள், வாய்ப்புகள் உள்ளிட்ட வேலை குறித்து மாணவர்களுக்கு தெரிந்து கொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வெற்றி வாய்ப்பு
இதற்காக மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் உதவிகள் வழங்க தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
யார் ஒரு செயலை தொடர்ந்து முயற்சி செய்கிறார்களோ, அவர்கள் அறிவு, திறமை பெற்று வெற்றி வாய்ப்பு கிடைக்கின்றது. எனவே மாணவர்கள் அடுத்து வரக்கூடிய 30 ஆண்டுகளில் வாய்ப்புகள் உள்ள துறைகளைப் பற்றி தெரிந்து கொண்டு படிக்க வேண்டும். இன்று தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் எது கடினமாக இருக்கிறதோ அதை எளிதாக முடிப்பதற்கான லட்சியம் இருக்கிறது.
எனவே மாணவ-மாணவிகள் அரசு தங்களுக்காக செயல்படுத்தும் நோக்கத்தினை புரிந்து கொண்டு கல்வி அறிவு பெற்று தங்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் குறித்து நன்கு அறிந்து கொண்டு பயணிக்கும் போது நிச்சயமாக வெற்றி அடையலாம்.இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து பல்வேறு துறை பேராசிரியர்கள், மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் பற்றி விளக்கி கூறினார்.