< Back
மாநில செய்திகள்
மீனவர் வலையில் சிக்கிய திமிங்கல உமிழ்நீர்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மீனவர் வலையில் சிக்கிய திமிங்கல உமிழ்நீர்

தினத்தந்தி
|
29 Sept 2022 3:33 PM IST

செய்யூரில் மீனவர் வலையில் திமிங்கல உமிழ்நீர் சிக்கியது.

செங்கல்பட்டு மாவட்டம் மீனவர் குடியிருப்பை அடுத்த கடப்பாக்கம் குப்பம் பகுதியை சேர்ந்தவர் இந்திரகுமார். இவரது உறவினர்களான கர்ணன், மாயகிருஷ்ணன் ஆகியோருடன் நேற்று மீன் பிடிக்க சென்றார் அப்போது மீன்வலையில் பொருள் ஒன்று சிக்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் அங்குள்ள மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் தகவல் அளித்தனர்.

அது திமிங்கல உமிழ்நீர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் சூனாம்பேடு போலீசில் தகவல் அளித்தனர். அதன்பேரில் கடலூர் காவல் படை மீன்வளத்துறை அதிகாரிகள் அச்சரப்பாக்கம் வனத்துறையுடன் அந்த பொருள் ஒப்படைக்கப்படுகிறது 35 கிலோ எடை கொண்ட இந்த திமிங்கலத்தின் உமிழ்நீர் உலக அளவில் சர்வதேச சந்தையில் ஒரு கிலோ ரூ.1½ கோடி என்று மதிப்பீடு செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்