< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

மயிலாடுதுறையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
6 Dec 2022 12:15 AM IST

மயிலாடுதுறையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தலா ரூ.5 ஆயிரத்து 479 மதிப்பில் விலையில்லா தையல் எந்திரங்களை 10 பயனாளிகளுக்கும், விலையில்லா சலவைப் பெட்டி தலா ரூ.4 ஆயிரத்து 650 மதிப்பில் 7 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டன. மேலும் ஏற்கனவே பெறப்பட்ட மனுக்களுக்கு மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில் உடனடியாக தீர்வுகாணப்பட்டு, சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு விதவை, முதியோர், முதிர்கன்னி, மாற்றுத்திறனாளி, கணவரால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை பெறுவதற்குரிய ஆணைகள் வழங்கப்பட்டன. நலத்திட்ட உதவிகளை கலெக்டர் லலிதா வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், தனித்துணை கலெக்டர் (சமூகபாதுகாப்பு திட்டம்) கண்மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்