< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பான பணி செய்தவர்களுக்கு விருது  தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பான பணி செய்தவர்களுக்கு விருது தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

தினத்தந்தி
|
17 Oct 2022 12:15 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பான பணிசெய்தவர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியானர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.


இது தெடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரசு விருது

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா வருகிற டிசம்பர் மாதம் 3-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விருதகள் மற்றும் தங்க பதக்கம், சான்றிதழக்ளை வழங்க உள்ளார்.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு வகையான குறைபாடுகளுடன் கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கும், பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்தல், செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்தல் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர்க்கு கற்பித்தவர்களில் சிறந்த முறையில் கற்பித்த 3 ஆசிரியர்களுக்கும், சிறப்பாக பணிபுரிந்த சமூக பணியாளர் ஒருவருக்கும் விருது வழங்கப்பட உள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைபுரிந்த சிறந்த தொண்டு நிறுவனம் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அதிகளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனத்திற்கும், செவித்திறன் குறைந்தோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர், மனவளர்ச்சி குன்றியோர்க்கு கற்பிக்கும் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் 2 சிறந்த ஆசிரியர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களில் 2 நபர்களுக்கும், பொது கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ள 2 சிறந்த அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கும் தங்கப்பதக்கத்துடன் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

20-ந்தேதிக்குள்...

விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் அல்லது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் www.scd.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் வருகிற 20-ந்தேதி மாலை 5.30 மணிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் சமர்ப்பித்திட வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்