காஞ்சிபுரம்
மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 218 பயனாளிகளுக்கு ரூ 3.37 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
|திம்மசமுத்திரம் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 218 பயனாளிகளுக்கு, ரூ 3.37 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
முகாமில் காஞ்சீபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சீபுரம் ஆர்.டி.ஓ. ரம்யா, கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, காஞ்சீபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நித்தியா சுகுமார், காஞ்சீபுரம் தாசில்தார் புவனேஷ்வரன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் திம்மசமுத்திரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார். பின்னர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ரேஷன்கடையை பார்வையிட்டு, பொருட்களின் இருப்பு நிலையை கேட்டறிந்தார். மேலும் திம்மசமுத்திரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியை பார்வையிட்டு, பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் கற்றல் திறனை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் பா.ஜெயஸ்ரீ மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.