< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - மேடையில் உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர் காந்தி
மாநில செய்திகள்

ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - மேடையில் உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர் காந்தி

தினத்தந்தி
|
29 April 2023 10:42 PM IST

மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து மேடையில் அமைச்சர் காந்தி உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளி பயனாளர்களுக்கு தையல் இயந்திரங்கள், மூன்ற சக்கர வாகனங்கள் உள்பட ரூ.1.44 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய அமைச்சர் காந்தி மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து பேசினார். அப்போது அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசியது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகள்