திருவண்ணாமலை
மனுநீதிநாள் முகாமில் 88பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
|எறும்பூர் கிராமத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 88 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சேத்துப்பட்டு
எறும்பூர் கிராமத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 88 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பெரணமல்லூர் ஒன்றியம் எறும்பூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு செய்யாறு சப்-கலெக்டர் வினோத்குமார் தலைமை தாங்கினார். பெரணமல்லூர் ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், வந்தவாசி தாசில்தார் முருகானந்தம், சமூக பாதுகாப்பு தாசில்தார் சுபாஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
இதில் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான மனுக்கள் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, புதிய பட்டா சிட்டா, ரேஷன் கார்டு மற்றும் ஆனைபோகி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 6 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், வேளாண்மை துறை மூலம் இடுபொருள் உள்பட 88 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை செய்யாறு சப்-கலெக்டர் வினோத்குமார் தலைமை தாங்கிவழங்கினார்.நிகழ்ச்சியில் பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், டாக்டர் வினிதா, சுகாதார ஆய்வாளர் ரகுபதி செவிலியர்கள் அரசு அலுவலர்கள் உ்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில், கிராம நிர்வாக அலுவலர் அர்ஜுனன் நன்றி கூறினார்.