தென்காசி
41 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
|சிவகிரி அருகே மனுநீதி நாள் முகாம்: 41 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
சிவகிரி:
தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா தென்மலை பாகம்-1 கிராமத்தை சார்ந்த வண்ணான்பாறை என்ற ஏ.சுப்பிரமணியாபுரம், அருகன்குளம், செந்தட்டியாபுரம் புதூர், மற்றும் இனாம் கோவில்பட்டி ஆகிய கிராமங்களுக்கு கடந்த 13-ந்தேதி தென்மலை கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடந்தது. அப்போது பொதுமக்களிடமிருந்து 71 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றிற்கு விளக்கம் மற்றும் தீர்வு காணும் வகையில் தென்மலை பாகம்-1 சமுதாய நலக்கூடத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் தலைமையில் மனுநீதி முகாம் நடந்தது. வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் சதன்திருமலைக்குமார் முன்னிலை வகித்தார்.
முன்னோடி மனுநீதி நாளில் பெறப்பட்ட 71 மனுக்களில் 41 மனுக்கள் ஏற்கப்பட்டன. 29 பயனாளிகளுக்கு பட்டாவும், முதியோர் உதவித்தொகை உத்தரவு 13 பேருக்கும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் உதவி கலெக்டர் ஜெ.ஹஸ்ரத் பேகம், உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.