< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
36 ஆயிரத்து 691 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
|27 Nov 2022 12:26 AM IST
36 ஆயிரத்து 691 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
கொல்லாபுரத்தில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள அரசு விழாவில் கலந்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள 3 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 51 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 27 ஆயிரத்து 70 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள 54 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 23 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 9 ஆயிரத்து 621 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.