< Back
மாநில செய்திகள்
தட்டார்மடத்தில் 2,500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தட்டார்மடத்தில் 2,500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

தினத்தந்தி
|
5 Jun 2022 9:26 PM IST

தட்டார்மடத்தில் 2,500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

தட்டார்மடம்:

தட்டார்மடத்தில் 2,500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தட்டார்மடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாநடைபெற்றது. விழாவுக்கு தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலர் ஆ. பாலமுருகன் தலைமை தாங்கினார். முதலூர் ஊராட்சித் தலைவர் பொன்முருகேசன் முன்னிலை வகித்தார். இதில் தலைமை கழக பேச்சாளர் சரத்பாலா சிறப்புரையாற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, 2,500 பேருக்கு தையல் எந்திரம், கிரைண்டர், இஸ்திரி பெட்டி, இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கி பேசினார். கூட்டத்தில் சாத்தான்குளம் யூனியன் தலைவர் ஜெயபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வீரபாண்டியன்பட்டினம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள தனியார் விடுதியில் இளைஞரஅணி நிர்வாகிகளுக்கு திராவிட இயக்க வரலாறு பயிற்சி பாசறை நடந்தது. நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் தி.மு.க. செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா கலந்து கொண்டு இளைஞரணி நிர்வாகிகளுக்கு திராவிட முன்னேற்ற கழகம் எப்போது உருவாக்கப்பட்டது, எதற்காக உருவாக்கப்பட்டது. அதனால் மக்களுக்கு ஏற்பட்ட பயன்கள் குறித்து விளக்கமாக பேசினார்.

நிகழ்ச்சியில், ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சண்முகையா, தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், மாவட்ட அவை தலைவர் அருணாச்சலம், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன், திருச்செந்தூர் நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிகோ, வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து துணைத் தலைவர் ஜெகதீஸ் வீ.ராயன் உள்பட இளைஞரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முத்தாரம்மன் கோவில்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தண்டுபத்து சண்முககனி நாடார் பிச்சைமணி அம்மாள் அறக்கட்டளை சார்பில், இவர்களது மகன் ராமசாமி என்பவர் நன்கொடையாக முன்மண்டபம் கட்டி கொடுக்க முடிவு செய்துள்ளார். இதையொட்டி மண்டபம் கட்டுவதற்கான வரைபடங்கள் தயாரிக்கபட்டு, அரசு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்துசமய அறநிலையத்துறையை சேர்ந்த இணை ஆணையர் அன்புமணி, நகைசரிபார்க்கும் துணை ஆணையர் வெங்கடேஷ், ஆய்வாளர் பகவதி மற்றும் அறநிலையத் துறை அலுவலர்கள் ஆகியோர் வந்தனர். மண்டபம் உருவாகும் இடங்களை சுற்றிப்பார்த்து ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் கூறுகையில், கோவிலில் முன்மண்டபம் கட்டும் பணி தொடக்க விழா வருகிற 14-ந்தேதி நடக்கிறது. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நட்டி, முன்மண்டபம் கட்டும் பணியை தொடங்கி வைக்கிறார். வருகின்ற தசரா திருவிழாவிற்கு முன்பு இந்த மண்டபத்தை கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.

மேலும் செய்திகள்