< Back
மாநில செய்திகள்
24 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
சேலம்
மாநில செய்திகள்

24 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

தினத்தந்தி
|
6 Jun 2022 8:00 PM GMT

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 24 மாற்றுத்தினாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

சேலம்:

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 24 மாற்றுத்தினாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் வழங்கினர்.

இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, குடிநீர் வசதி என மொத்தம் 359 மனுக்கள் பெறப்பட்டன.

மேலும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 54 மனுக்கள் பெறப்பட்டன. இதில் தகுதியான மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்த அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

நலத்திட்ட உதவிகள்

21 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 62 ஆயிரத்து 500 மதிப்பில் பிரத்தியேக செல்பேசியும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8 ஆயிரத்து 610 மதிப்பில் உருப்பெருக்கிகள் உள்பட 24 பேருக்கு ரூ.2 லட்சத்து 71 ஆயிரத்து 110 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசுத்துறை அலுவலகங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் அனைத்து நாட்களிலும் சிரமமின்றி சென்று வருவதற்கு ஏதுவாக கலெக்டரின் விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.1 லட்சத்தில் பேட்டரியால் இயங்கும் அதிநவீன சக்கர நாற்காலி வாங்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சத்திய பாலகங்காதரன், மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்னன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்