கள்ளக்குறிச்சி
219 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
|தென்கீரனூரில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 219 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மாவட்ட மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, கால்நடை பராமரிப்பு இணை இயக்குனர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கலெக்டர் ஷ்ரவன்குமார் 219 பேருக்கு மொத்தம் ரூ.36 லட்சத்து 84 ஆயிரத்து 150 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு திட்டங்களும் மக்களை தேடி வழங்கும் வகையில்செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நடவடிக்கை
.பொது மக்களின் நலன் கருதி வருவாய் துறையின் அனைத்து விதமான சான்றுகளை எளிமையான முறையில் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொற்று நோய் பரவுவதை தடுக்க பொதுமக்கள் கிராமங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். .கூட்டத்தில் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா, உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், மாவட்டபிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செல்வகுமார், தாசில்தார் சத்தியநாராயணன், சமூக பாதுகாப்பு தனிதாசில்தார் கோபாலகிருஷ்ணன், ஊராட்சிமன்றத் தலைவர் வெண்ணிலா ஜெயபிரகாஷ் நாராயணன்மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.