கள்ளக்குறிச்சி
1700 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி
|திருக்கோவிலூரில் 1700 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் எம்.எஸ்.ஜுவல்லர்ஸ் நிறுவனங்களின் நிறுவன தலைவர் நினைவு தினத்தை முன்னிட்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருக்கோவிலூர் மார்க்கெட் வீதியில் நடைபெற்றது. இதற்கு நிறுவனங்களின் தலைவர் தொழிலதிபர் எம்.கோத்தம்சந்த் தலைமை தாங்கினார். திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், நகராட்சி துணை தலைவர் உமாமகேஸ்வரிகுணா, நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் வி.பி.கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி விஜயராஜ்ஜெயின் வரவேற்றார். விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும், திருக்கோவிலூர் நகராட்சி தலைவருமான டி.என்.முருகன் எம்.எஸ்.ஜுவல்லர்ஸ் நிறுவனங்களின் சார்பில் 600 ஏழைகளுக்கு இலவச வேட்டி-சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் மாற்றுத் திறனாளிகள் 100 பேருக்கு பேண்ட்-சட்டை, ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகைக்கடை உரிமையாளர்கள், வியாபார பிரமுகர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகிகள் ஆகாஷ் மற்றும் அரவிந்த் ஆகியோர் நன்றி கூறினார்கள்.