< Back
மாநில செய்திகள்
திட்டக்குடி அருகே    1,050 பேருக்கு நலத்திட்ட உதவிகள்    அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார்
கடலூர்
மாநில செய்திகள்

திட்டக்குடி அருகே 1,050 பேருக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார்

தினத்தந்தி
|
14 Aug 2022 10:35 PM IST

திட்டக்குடி அருகே 1,050 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார்.

ராமநத்தம்,

திட்டக்குடி அருகே ஆலம்பாடி கிராமத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் 1,050 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் பவன்குமார் ஜி கிரியப்பனவர், மாவட்ட வழங்கல் அதிகாரி உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் கார்த்திக் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்து கொண்டு பல்வேறு துறைகள் மூலம் பயனாளிகள் 1,050 பேருக்கு ரூ.2 கோடியே 44 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.

விழாவில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா, சமூக பாதுகாப்பு தாசில்தார் ரவிச்சந்திரன், ஒன்றியக்குழு தலைவர் சுகுணா சங்கர், மங்களூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பட்டூர் அமிர்தலிங்கம், செங்குட்டுவன், நகரமன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம், நகரமன்ற துணைத் தலைவர் பரமகுரு, மங்களூர் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் கலைச்செல்வி செல்வராஜ், ஆலம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் கொளஞ்சி பாண்டியன், துணைத்தலைவர் முரளி, திட்டக்குடி நகர இளைஞரணி அமைப்பாளர் சேதுராமன், திட்டக்குடி தொழில்நுட்ப அணி விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்