நாமக்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
|நாமக்கல்லில் 34 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.
நாமக்கல்லில் 34 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.
குறைதீர்க்கும் கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான உதவி உபகரணங்கள், மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, சிறப்பு மடக்கு சக்கர நாற்காலி, பேட்டரி பொருத்தப்பட்ட அதிநவீன சிறப்பு சக்கர நாற்காலி, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனம், மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், காதொலி கருவி, செவித்திறன் குறைபாடுடையோர் மற்றும் கண் பார்வையற்றோருக்கு செல்போன், பாராமரிப்பு உதவித்தொகை மற்றும் வங்கிகடன், இலவச வீட்டுமனைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 114 கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.
நலத்திட்ட உதவிகள்
இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி இம்மனுக்களின் மீது 10 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். இம்மனுக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.
பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பேருக்கு தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான பேட்டரி பொருத்தப்பட்டுள்ள அதிநவீன சிறப்பு சக்கர நாற்காலிகளையும், 27 பேருக்கு தலா ரூ.3 ஆயிரம் மதிப்பிலான காதொலி கருவிகளையும், ஒருவருக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலியையும், 3 பேருக்கு தலா ரூ.4 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களையும், ஒருவருக்கு பிரெய்லி ெகடிகாரம், ரூ.3,500 மதிப்பிலான அதிரும் மடக்கு கம்பு என 34 பேருக்கு ரூ.3 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமுருகதட்சணாமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தேவிகாராணி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.