< Back
மாநில செய்திகள்
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தூத்துக்குடி
மாநில செய்திகள்

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தினத்தந்தி
|
15 Aug 2022 6:48 PM GMT

தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது

தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் மாவட்ட முன்னாள் தலைவர் ஜஸ்டின் நினைவுநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஐ.என்.டி.யு.சி. மாநில அமைப்பு செயலாளருமான கே.பெருமாள் சாமி கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநில அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் டி.ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ் நகர தலைவர் அருள்வளன், மாவட்ட பொது செயலாளர் இக்னேசியஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்