< Back
மாநில செய்திகள்
மக்கள் தொடர்பு திட்ட முகாமில்ரூ.19½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்கலெக்டர் சரயு வழங்கினார்
தர்மபுரி
மாநில செய்திகள்

மக்கள் தொடர்பு திட்ட முகாமில்ரூ.19½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்கலெக்டர் சரயு வழங்கினார்

தினத்தந்தி
|
12 Oct 2023 1:00 AM IST

பாப்பாரப்பட்டியில் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.19½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சரயு வழங்கினார்.

மத்தூர்:

பாப்பாரப்பட்டியில் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.19½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சரயு வழங்கினார்.

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா பாப்பாரப்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். முகாமில் அரசின் அனைத்து துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் நேரடியாக விளக்கி கூறினர்.

முகாமில் கலெக்டர் சரயு பேசும் போது, மத்திய, மாநில அரசுகள் மக்களுக்காக பல்வேறு திட்டங்களைசெயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக்கூறவும், அரசு திட்டங்கள் மூலம் மக்கள் எவ்வாறு பயனடைய முடியும் என்பதை துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் மக்களுக்கு விளக்கவும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் 139 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. தகுதிவாய்ந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

149 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

முன்னதாக கலெக்டர், பல்வேறு துறைகள் சார்பில் 149 பேருக்கு ரூ.19 லட்சத்து 64 ஆயிரத்து 779 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளையும், வேளாண்மைத் துறை சார்பாக சிறப்பு வாகனத்தில் மண் பரிசோதனை செய்யும் பணிகளையும், ஊராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளையும் கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் பாபு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பத்மலதா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரமேஷ்குமார், வேளாண்மைத்துறை துணை இயக்குனர் சீனிவாசன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சரவணன், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அருள்ராஜ், வேளாண்மைத்துறை சித்ரா, தாசில்தார் மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, உமாசங்கர், ஒன்றிய குழு உறுப்பினர் வடிவேலு, ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்